தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை மீண்டும் நிரம்பி வழிகிறது.


தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை மீண்டும் நிரம்பி வழிகிறது.
x
தினத்தந்தி 3 Sept 2021 5:49 PM IST (Updated: 3 Sept 2021 5:49 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே தமிழக -ஆந்திர எல்லையில் பெய்த கனமழையால் புல்லூர் தடுப்பணை மீண்டும் நிரம்பி வழிவதால் பாலாற்றின்கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே தமிழக -ஆந்திர எல்லையில் பெய்த கனமழையால் புல்லூர் தடுப்பணை மீண்டும் நிரம்பி வழிவதால் பாலாற்றின்கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்மழை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லை பகுதியான நாராயணபுரம், அலசந்தாபுரம் பகுதிகளிலும், திம்மகெடா நீர்வீழ்ச்சி பகுதியிலும் சுமார் 2 மணி நேரம் பெய்த கன மழையால், திம்மகெடா நீர்வீழ்ச்சியில் இருந்து உருவாகும் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அலசந்தாபுரம் பகுதியில் உள்ள பூதனாற்றில் கலக்கிறது. பின்னர் நாராயணபுரம், திம்மாம்பேட்டை மண்ணாற்றின் வழியாக ஆவாரங்குப்பம் பாலாற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இந்த மழையால் நாராயணபுரம், அலசந்தராபுரம், திம்மாம்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கு

மேலும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை மீண்டும் நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதி மக்களும், சுற்றுப்புற பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் அந்த அணைக்கு வந்து குளித்து செல்கின்றனர். 

தடுப்பணை நிரம்பி வழிவதாலும், பாலாற்று பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Next Story