அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா
அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அரியாங்குப்பம், செப்.
அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
331-வது ஆண்டு திருவிழா
அரியாங்குப்பத்தில் பிரசித்திபெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 331-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. புதுவை- கடலூர் உயர்மறை மாவட்ட முதன்மை குருவான ஆயரின் பிரதிநிதி அருள் தந்தை அருளானந்தம் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆலய பங்குத்தந்தை அந்தோணிரோச் தலைமை தாங்கினார்.
இதில் பங்கு நிர்வாகக்குழு, பங்கு மக்கள் திரளான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கலந்துகொண்டனர். கைகளை சுத்தம் செய்துகொள்ள கிருமிநாசினியும் வழங்கப்பட்டது.
தேர்பவனி ரத்து
நவ நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அன்னையின் பெருவிழாவான 8-ந்தேதி ஆடம்பர தேர் ஆலய முற்றத்தில் பக்தர்களின் வழிபாட்டுக்கு அலங்கரித்து வைக்கப்படுகிறது.
ஆண்டு பெருவிழா வருகிற 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் அன்று காலை 6 மணிக்கு திருப்பலி நடக்கிறது. காலை 7.30 மணிக்கு அப்போஸ்தலிக்க ஆயர் பீட்டர் அபீர் தலைமையில் திருப்பலி நடக்கிறது.
அதைத்தொடர்ந்து மாலை 6 மணி திருப்பலிக்குப் பின் ஆலய உள்புறத்தில் மட்டும் ஆடம்பர பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. நோய்த்தொற்று பரவல் காரணமாக அரசு விதிகளுக்கு உட்பட்டு ஆடம்பர தேர் பவனி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து 13-ந்தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை அந்தோணி ரோச் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story