மீன்வளர்ப்பு பண்ணை குட்டைகள்


மீன்வளர்ப்பு பண்ணை குட்டைகள்
x
தினத்தந்தி 3 Sept 2021 9:07 PM IST (Updated: 3 Sept 2021 9:07 PM IST)
t-max-icont-min-icon

மீன்வளர்ப்பு பண்ணை குட்டைகள்

தாராபுரம், 
தாராபுரத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 2020-21ன் கீழ் 1000 ச.மீ அளவில் பண்ணைகுட்டைகள் அமைத்து வேகமாக வளரக் கூடிய மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் வளர்ப்பு செய்யும் திட்டத்தின் கீழ் தாராபுரம், கரையூர் ஆகிய பகுதிகளை சார்ந்த 2 பயனாளிகள் பண்ணை குட்டைகள்அமைத்து மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்குஞ்சுகளை குட்டைகளில் வளத்து வருகின்றனர்.
 இந்த பயனாளிகளுக்கு 40 சதவீத மானியத் தொகை அதிகபட்சமாக ரூ.39 ஆயிரத்து 600 வழங்கப்பட்டது. இப்பயனாளிகளின் பண்ணைக்குட்டைகளை பவானிசாகர் (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் தில்லைராஜன் ஆய்வு செய்தார். அப்போது ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கொளஞ்சிநாதன், பவானிசாகர் (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் அலுவலக கடல் முதல்வர் தமிழரசி மற்றும் நல்லதங்காள் ஓடை மீன்வள மேற்பார்வையாளர் வீரக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story