ஆறுமுகநேரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


ஆறுமுகநேரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Sept 2021 10:00 PM IST (Updated: 3 Sept 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மூக்காண்டி மகன் மாதவன் (வயது 26). இவர் தற்போது ஆறுமுகநேரி வாலவிளை பகுதியில் வாடகை வீட்டில் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். ஆறுமுகநேரி காமராஜபுரத்தில் கடை நடத்தி வந்துள்ளார் கொரோனா காலகட்டத்தில் கடையில் வியாபாரம் நடக்காத நிலையில் நஷ்டம் ஏற்பட்டதால், அந்த கடையை மூடிவிட்டு கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மனைவி முத்துராணி தனது சகோதரியின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று மாதவனிடம் கேட்டுள்ளார். இப்போது உள்ள சூழ்நிலையில் செல்லவேண்டாம் என்று மனைவியை அவர் கண்டித்துள்ளார். ஆனாலும் அவரது மனைவி தங்கை திருமணத்திற்கு சென்றாராம். ஏற்கனவே தொழிலில் நஷ்டம் அடைந்து எந்த தொழிலும் இல்லாமல் இருந்து வந்த அவர், இதனால் மேலும் மனவேதனை அடைந்தாராம். இந்த நிலையில், மாதவன் வீட்டில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story