கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு வாலிபர் கைது


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Sept 2021 10:19 PM IST (Updated: 3 Sept 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

வளவனூர், 

விழுப்புரம் அருகே தேவநாதசுவாமி நகரில்  ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு இருந்த உண்டியலை நேற்று முன்தினம் இரவு மர்ம மனிதர் உடைத்து அதில் இருந்த பணத்தை திருட்டி சென்றுவிட்டார். 

இது தொடர்பாக கோவில் செயலாளர் பத்மநாபன் வளவனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்  மருத்தப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

 மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். 

அதில்,  விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த சங்கர் மகன் பழனிவேல் (வயது 27) என்பவர் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து பழனிவேலை போலீசார் கைது செய்தனர். 

Next Story