ஓய்வுபெற்ற மறுநாளில் மத்திய பாதுகாப்பு படை வீரர் நண்பருடன் ைகது


ஓய்வுபெற்ற மறுநாளில் மத்திய பாதுகாப்பு படை வீரர் நண்பருடன் ைகது
x
தினத்தந்தி 3 Sept 2021 10:35 PM IST (Updated: 3 Sept 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த மத்திய பாதுகாப்பு படை வீரர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற மறுநாள் தனது நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த மத்திய பாதுகாப்பு படை வீரர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற மறுநாள் தனது நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

விவகாரத்து வழக்கு நிலுவை

ஜோலார்பேட்டைைய அடுத்த பெரியமோட்டூர் பூனைக்குட்டிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரின் மகன் யாழரசு (வயது 44). மத்திய பாதுகாப்புப்படை வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கும் சின்னகம்மியம்பட்டு களர்வட்டம் பகுதியைச் சேர்ந்த பிரதீபா (29) என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவருக்குமான விவகாரத்து வழக்கு மற்றும் ஜீவனாம்சம் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் யாழரசு பணியில் இருந்து நேற்று முன்தினம் ஓய்வுபெற்று நேற்று சொந்த ஊருக்கு திரும்பினார். ஊருக்கு வந்த அவரும், நண்பர் பசுபதி (48) என்பவரும் சேர்ந்து நேற்று பிரதீபாவின் வீட்டுக்கு சென்றனர். இருவரும் அத்துமீறி உள்ளே நுழைந்து வீட்டில் உள்ள பல்புகளை தடியால் உடைத்து சேதப்படுத்தி, தகாத வார்த்தைகளால் பேசி திட்டி, பிரதீபாவின் தலைமுடிைய பிடித்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

சிறையில் அடைப்பு

இதுகுறித்து பிரதீபா கொடுத்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக ஓய்வுபெற்ற மத்திய பாதுகாப்புப்படை வீரர் யாழரசு, நண்பர் பசுபதி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story