பவானி ஆற்றின் கரையோரத்தில் கோட்டாட்சியர் ஆய்வுடாது


பவானி ஆற்றின் கரையோரத்தில் கோட்டாட்சியர் ஆய்வுடாது
x
தினத்தந்தி 3 Sep 2021 5:08 PM GMT (Updated: 3 Sep 2021 5:08 PM GMT)

பவானி ஆற்றின் கரையோரத்தில் கோட்டாட்சியர் ஆய்வுடாது

மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. 

இதில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை சிக்கித்தவித்த 43 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். 5 பேர் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளனர்.

இது போன்ற நிலை ஏற்படுவதை தவிர்க்க ஆற்றில் வெள்ளம் வரும் போது சைரன் ஒலி எழுப்பப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்படுகிறது.  ஆனாலும் பவானி ஆற்றில் சிக்கி இறக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 

எனவே பவானி ஆற்றில் பொதுமக்கள் சிக்கி தவிப்பது மற்றும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் ஆற்றின் கரையோர பகுதியில் கூடுதல் இடங்களில் சைரன்கள் அமைத்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் நெல்லித்துறை விளாமரத்தூர் குண்டுக்கல்துறை, சமய புரம் பவானி கதவணை நீர்மின் நிலையம் -1, மேட்டுப்பாளையம் சாமண்ணா தலைமை நீரேற்று நிலையம், ஓடந்துறை பவானி ஆறு ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Next Story