தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற திட்டம்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றப்பட உள்ளது.
சிவகங்கை,
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றப்பட உள்ளது.
மானியம்
சிவகங்கை வட்டாரத்தில் 2021-22-ம் ஆண்டில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கா.நெடுங்குளம், கண்ணாரிருப்பு, அழகிச்சிப்பட்டி, சோழ புரம், திருமலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் செயல் படுத்தப்பட இருக்கிறது.
இந்த திட்டத்தினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மின்சாரத்துறை, வருவாய் துறை, கூட்டுறவு துறை போன்ற வேளாண் சார்ந்த பல்வேறு துறைகள் இணைந்து 50 சதவீத மானியத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி, வேளாண் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியை பெருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புள்ளி விவரங்கள்
அதன்படி கா.நெடுங்குளம் ஊராட்சியில் சிவகங்கை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) பன்னீர்செல்வம் தலைமையிலும், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலையிலும் அடிப்படை புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வளர்மதி வரவேற்று பேசினார். வேளாண்மை பொறியியல் துறையின் உதவி பொறியாளர்.ஆர்த்திக் கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின்கீழ் தரிசு நிலங்கள் அடையாளம் காணப்பட்டு 5 எக்டேர் முதல் 16 எக்ேடர் வரையிலான குழுக்களாக அமைத்து, அதில் உள்ள மரம், செடி, முட்புதர்கள், சீமை கருவேல் மரங்களை வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக எந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்தும், உழவுப் பணி மேற்கொண்டும், நீர் ஆதாரத்திற்காக தேவைப்படும் இடங்களில் ஆழ்துளைகிணறு அமைத்து கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஏற்பாடு
முடிவில் வேளாண்மை அலுவலர் தியாகராஜன் நன்றி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் உதயகுமார் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். அதேபோன்று அழகிச்சிப்பட்டி ஊராட்சியில் வேளாண்மை அலுவலர் தங்கபாண்டியன் தலைமையிலும் ஒன்றிய கவுன்சிலர் உதவி பொறியாளர் சீனிவாசன், உதவி தோட்டக்கலை அலுவலர் கலைச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர் புரோஸ்கான் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் விஜயகுமார் வரவேற்புரை நிகழ்த் தினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story