தேன்கனிக்கோட்டை அருகே மின்கம்பங்களை சேதப்படுத்திய யானைகள் கூட்டம் கிராமங்கள் இருளில் மூழ்கின
தேன்கனிக்கோட்டை அருகே யானைகள் கூட்டம் மின் கம்பங்களை சேதப்படுத்தியதால் கிராமங்கள் இருளில் மூழ்கின.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே யானைகள் கூட்டம் மின் கம்பங்களை சேதப்படுத்தியதால் கிராமங்கள் இருளில் மூழ்கின.
யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள டபுள்கான்தொட்டி என்ற கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டம் ஊருக்குள் சுற்றித்திரிந்தன. அப்போது அங்கு சாலையிலுள்ள ஒரு பெரிய மரத்தை யானைகள் வேறோடு சாய்த்து சென்றன. தொடர்ந்து அந்த யானைகள் கூட்டம் அருகில் இருந்த 2 மின்கம்பங்களை சேதப்படுத்தின. இதில் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கிராமங்கள் இருளில் மூழ்கின
இதன் காரணமாக 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. மின்சாரம் இல்லாததால் நள்ளிரவு முதல் கிராமமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து கிராமமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை நட்டு வைத்தனர். மேலும் அறுந்து கிடந்த மின்கம்பிகளை சீரமைத்து மின் இணைப்பு வழங்கினர். தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
Related Tags :
Next Story