வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம்
ஸ்ரீமதுரை அருகே வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது. இதற்கு இழப்பீடு வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்,
ஸ்ரீமதுரை அருகே வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது. இதற்கு இழப்பீடு வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காட்டுயானை அட்டகாசம்
கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி ஓடக்கொல்லி பகுதியில் விநாயகன் என்ற காட்டுயானை பல வாரங்களாக ஊருக்குள் வந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.
மேலும் விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விநாயகன் யானை ஓடக்கொல்லி பகுதிக்குள் மீண்டும் நுழைந்தது. பின்னர் சாஜன், முகுந்தன் ஆகியோரது வீடுகளை இடித்து அட்டகாசம் செய்தது. அப்போது வீடுகளில் இருந்த மக்கள் தப்பி ஓடினர்.
வீடுகள் தரைமட்டம்
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானையை விரட்டியடித்தனர். பின்னர் சாஜன், முகுந்தன் ஆகியோரது குடும்பத்தினர் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
அப்போது வீடுகள் தரைமட்டமாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டில் இருந்த கதவு உள்பட அனைத்து பொருட்களும் சேதமடைந்து இருந்தது. இதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
இதற்கிடையே காட்டுயானை ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மண் வயல் பஜாரில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் காட்டுயானையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கூடலூர் தொரப்பள்ளி வனத்துறை சோதனைச்சாவடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story