குடியாத்தம் அருகே ஒரே நேரத்தில் பின்னிப்பிணைந்த 3 பாம்புகள்


குடியாத்தம் அருகே ஒரே நேரத்தில் பின்னிப்பிணைந்த 3 பாம்புகள்
x
தினத்தந்தி 3 Sep 2021 5:23 PM GMT (Updated: 2021-09-03T22:53:23+05:30)

ஒரே நேரத்தில் பின்னிப்பிணைந்த 3 பாம்புகள்

குடியாத்தம்

இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைவதை பார்த்திருக்கிறோம். ஆனால் குடியாத்தம் அருகே 3 பாம்புகள் ஒரே நேரத்தில் பின்னிப்பிணைந்துள்ளது. குடியாத்தம் -பள்ளிகொண்டா சாலையில் ெரயில்வே மேம்பாலம் அருகே வேப்பூர் கிராமத்திற்கு சற்று முன்னதாக நேற்று மதியம் சுமார் 12 மணி அளவில் சாலையோரம் இருந்த புதர்களில் இருந்து சத்தம் கேட்டுள்ளது.

 அப்போது அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது 3 சாரைப்பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த மூன்று பாம்புகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தபடி இருந்துள்ளன.

பின்னர் ஒரு பாம்பு சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்று புதரில் மறைந்து விட்டது. இரண்டு பாம்புகள் மட்டும் நீண்ட நேரம் அங்கிருந்துள்ளது. தை பொதுமக்கள் தங்களின் செல்போன்களில் பதிவு செய்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story