கடலூர், சிதம்பரத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய சான்றிதழ் தேர்வு
தொடக்கம்
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய சான்றிதழுக்கான தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. முதல் நாள் 2-ம் ஆண்டு மாணவர்களுக்காக தேர்வு தொடங்கியது. நேற்று முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 145 பேர் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த தேர்வை 100 பேர் மட்டும் எழுதினர். மற்றவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு வருகிற 22-ந்தேதி வரை நடக்கிறது.
Related Tags :
Next Story