பாலாற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் நீர் மாசுபடும் அபாயம்


பாலாற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் நீர் மாசுபடும் அபாயம்
x
தினத்தந்தி 3 Sept 2021 11:17 PM IST (Updated: 3 Sept 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

பாலாற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர்

பாலாற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிளாஸ்டிக் குப்பைகள்

வேலூர் மாநகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்று திடக்கழிவு மேலாண்மை திட்டம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் குப்பைகள் மறுசூழற்சி செய்யப்படுகிறது. இதற்காக மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் திடக்கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள பாலாற்றில் மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதில் பெரும்பாலானவை  பிளாஸ்டிக் குப்பைகளாக உள்ளன. பல மாதங்களாக கொட்டப்பட்டு வருவதால் பாலாறு முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் பரவி கிடக்கிறது. சில இடங்களில் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இதனால் நீர் மாசுஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அங்கு வரும் மர்மநபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் உருவாகிறது. அதை அணைக்க மாநகராட்சி ஊழியர்கள் போராடுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பாலாற்றில் கொட்டப்படும் குப்பைகள் பாலாற்றையே ஆக்கிரமித்துள்ளது. தண்ணீரை விட பிளாஸ்டிக் கழிவுகள் தான் பாலாற்றில் பரவி காணப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலையில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து பாலாற்றை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

Next Story