கணியம்பாடி அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி


கணியம்பாடி அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
x
தினத்தந்தி 3 Sep 2021 5:51 PM GMT (Updated: 2021-09-03T23:21:20+05:30)

போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

அடுக்கம்பாறை

வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் ஒவ்வொரு ஆண்டும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்க காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

அதன்படி கணியம்பாடியை அடுத்த சலமநத்தம் கிராமத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி சுடும் பயிற்சி தொடங்கப்பட்டது. சட்டம் - ஒழுங்கு, ஆயுதப்படை என ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். 

இதில் வேலூர் கோட்டை மைதான பயிற்சி பள்ளி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி தலைமையில் 43 போலீசார் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். இதேபோல் அனைத்து போலீசாரும் கலந்து கொண்டு பயிற்சி பெறுவார்கள் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story