தொழிலாளி உள்பட 2 பேர் கைது


தொழிலாளி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Sep 2021 6:08 PM GMT (Updated: 2021-09-03T23:38:26+05:30)

ஆண்டிப்பட்டி அருகே மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி: 

ஆண்டிப்பட்டி அருகே ராஜதானி காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 26). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி யாழினி. இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் யாழினி, தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். 


இந்நிலையில் வேல்முருகன் அடிக்கடி கருவேல்நாயக்கன்பட்டிக்கு வந்து தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மாமனார் வீட்டில் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேல்முருகன், தங்கம்மாள்புரத்தை சேர்ந்த ஆகாஷ் (23) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் கருவேல்நாயக்கன்பட்டிக்கு வந்தார். அங்கு தனது மாமனார் கனியை ஆபாசமாக பேசியதுடன், கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இதுகுறித்து கனி தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், ஆகாஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story