வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் நூதன மோசடி


வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் நூதன மோசடி
x
தினத்தந்தி 4 Sept 2021 1:30 AM IST (Updated: 4 Sept 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் நூதன மோசடி செய்யப்பட்டது.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள சங்கர்நகரை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், தான் ஒரு தொழில் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், நாம் இணைந்து தொழில் செய்வோம், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும் கூறிஉள்ளார்.
அதற்காக அந்த வாலிபரிடம், மர்ம நபர் ஆன்-லைனில் நேர்முகத்தேர்வும் நடத்தினார். பின்னர் மர்ம நபர், அந்த வாலிபரிடம் தொழில் செய்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று கேட்டார்.
இதை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர் மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு இணையதளம் மூலம் ரூ.70,400 அனுப்பி வைத்தார். அதன்பின்னர் மர்ம நபர், வாலிபருக்கு தொடர்பு கொள்ளவில்லை. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர், அந்த மர்ம நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த வாலிபர் இதுகுறித்து நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி நூதன முறையில் வாலிபரிடம் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story