கலப்பு திருமணம் செய்தவர்கள் ஒதுக்கி வைப்பு


கலப்பு திருமணம் செய்தவர்கள் ஒதுக்கி வைப்பு
x
தினத்தந்தி 4 Sept 2021 1:55 AM IST (Updated: 4 Sept 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

கலப்பு திருமணம் செய்தவர்கள் ஒதுக்கி வைப்பு

திருச்சி, செப்.4-
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா திருப்பைஞ்சீலி ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்த கலப்பு திருமணம்செய்ததம்பதிகளானபாஸ்கரன்-சீதாலெட்சுமி, ரெங்கநாதன்-காவ்யா, கருணாநிதி-அஞ்சலி தேவி, பிரபு-மேனகா உள்ளிட்டோர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் சிவராசுவிடம் அளித்த கோரிக்கை மனுவில், நாங்கள் அனைவரும் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டோம். இதுபோல் எங்கள் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர். சுபநிகழ்ச்சகள் உள்பட எந்த நிகழ்ச்சிகள் என்றாலும் எங்களுடைய குடும்பத்தார்கள் யாரும் போகக்கூடாது என ஊர் முக்கியஸ்தர்கள் கூறி உள்ளனர். எங்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் கிராமத்தில் உள்ள சிலர் கிராம நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்களில் எங்களை அனுமதிக்க மறுக்கிறார்கள்.
இதனால் வெளியூரில் தங்கி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்களிடம் வரிவசூல் செய்ய மாட்டார்கள். எங்களில் யாரேனும் இறந்தால் கூட பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்கு இடமில்லை என்று கூறி உள்ளனர். ஆகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கலெக்டர் சிவராசு கூறி உள்ளார்.

Next Story