அங்கன்வாடி பணியாளரை தாக்கிய கணவர்


அங்கன்வாடி பணியாளரை தாக்கிய கணவர்
x
தினத்தந்தி 4 Sept 2021 1:56 AM IST (Updated: 4 Sept 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே அங்கன்வாடி பணியாளரை தாக்கிய கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள பி.குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் பாரதி (வயது 38). இவர் அங்குள்ள அங்கன்வாடி மைய பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் குருவராஜ். கடந்த 10 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து தனது 2 குழந்தைகளுடன ்பாரதி தனியாக வசித்து வருகிறார்.
 இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குருவராஜ், பாரதியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது பாரதி தடுத்ததால் அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது மேலும் குருவராஜ், மகனையும் தாக்கி காயப்படுத்தியதோடு வீட்டில் இருந்த அரசு வழங்கிய 2 செல்போன்களையும் எடுத்துக் கொண்டதுடன் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது பற்றி பாரதி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் குருவராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Next Story