முஸ்லிம் லீக் மாணவர் அணி ஆலோசனை கூட்டம்
கடையம் அருகே முஸ்லிம் லீக் மாணவர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
கடையம்:
கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி, மாணவர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி பொருளாளர் பீரப்பா தலைமை தாங்கினார். பிரைமரி தலைவர் இக்பால், ஒன்றிய செயலாளர் காதர் மைதீன், தொகுதி தலைவர் முஹம்மது யஹ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி தலைவர் இம்தாத்ஷா வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல் காதர் உரையாற்றினார்.
கூட்டத்தில், திருமலையப்பபுரம் முதல் கடையம் வரையுள்ள சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும். முதலியார்பட்டி, திருமலையப்பபுரம் பொதுக்கழிப்பறைகள், பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இதனை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சமையல் கியாஸ் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய அரசை வன்மையாக கண்டிப்பது, வருகிற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து போட்டியிட வேண்டும் எனவும், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற அயராது உழைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் செயலாளர் காதர் ஒலி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story