பட்டப்பகலில் சாலையில் உலா வந்த கரடி


பட்டப்பகலில் சாலையில் உலா வந்த கரடி
x
தினத்தந்தி 4 Sep 2021 4:58 AM GMT (Updated: 2021-09-04T10:28:40+05:30)

பட்டப்பகலில் சாலையில் உலா வந்த கரடி

கோத்தகிரி

கோத்தகிரி தாலுகாவில் அரவேனு அருகே அளக்கரை கிராமம் அமைந்து உள்ளது. இந்த கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது. இதனால் கரடி, சிறுத்தைப்புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இந்தநிலையில் நேற்று பகல் நேரத்தில் அரவேனுவில் இருந்து அளக்கரைக்கு செல்லும் சாலையின் குறுக்கே கரடி ஒன்று நடந்து வந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சற்று தொலைவிலேயே நிறுத்தி வைத்து பாதுகாப்பாக காத்திருந்தனர். மேலும் சாலைக்கு அருகே உள்ள தோட்டத்தில் பச்சை தேயிலை பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களும் கரடியை கண்டு பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர். 

சிறிது நேரம் சாலையில் உலா வந்த கரடி, அதன்பிறகு அருகில் இருந்த தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தது. இதைத்தொடர்ந்து வாகன ஓட்டிகள் புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரவேனு சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கரடிகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. அவை பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதால், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story