யானை சவாரி ஒத்திகை நிகழ்ச்சி
யானை சவாரி ஒத்திகை நிகழ்ச்சி
கூடலூர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை வனப்பகுதியில் வனத்துறையினருடன் ரோந்து செல்லுதல், ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை விரட்டியடித்தல், சுற்றுலா பயணிகளை வனப்பகுதிக்கு அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக 5 மாதங்களுக்கு பிறகு முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டு உள்ளது. அங்கு வாகன சவாரி நடந்து வருகிறது. நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் யானை சவாரி தொடங்க உள்ளது. இதையொட்டி யானை சவாரிக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக வளர்ப்பு யானைகள் அழைத்து வரப்பட்டு, அவைகள் மீது சுற்றுலா பயணிகள் அமரும் வகையில் கயிறு மூலம் இருக்கைகள் கட்டப்பட்டது. தொடர்ந்து யானைகள் மீது பாகன்கள் சிலர் அமர்ந்து வனப்பகுதிக்குள் சிறிது தூரம் சென்று திரும்பினர். இதுபோன்ற ஒத்திகை நிகழ்ச்சி காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story