நளினி முருகன் சந்திப்பு


நளினி முருகன் சந்திப்பு
x
தினத்தந்தி 4 Sep 2021 12:45 PM GMT (Updated: 2021-09-04T18:15:57+05:30)

வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி முருகன் சந்தித்து பேசினார்கள்.

வேலூர்

வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி முருகன் சந்தித்து பேசினார்கள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 

கோர்ட்டு உத்தரவுப்படி கணவன்-மனைவி 15 நாட்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்து பேசி வருகிறார்கள். அதன்படி நளினி-முருகன் சந்திப்பு இன்று வேலூர் பெண்கள் ஜெயிலில் நடைபெற்றது.

இதையொட்டி ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை வேலூர் நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையிலான போலீசார் பலத்த காவலுடன் பெண்கள் ஜெயிலிலுக்கு அழைத்து சென்றனர். 

அங்குள்ள ஒரு அறையில் காலை 9.20 முதல் 9.50 மணி வரை 30 நிமிடங்கள் நளினியை நேரில் சந்தித்து முருகன் பேசினார். அதன் பின்னர் அவர் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


Next Story