முதியவர் தற்கொலை
ஆறுமுகநேரி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியை அடுத்துள்ள பேயன்விளை புதூரை சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (வயது 75). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகி, தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடைசி மகன் சரவணனுடன் ஜெயபாண்டியனும், அவரது மனைவியும் வசித்து வந்தனர்.
ஜெயபாண்டியனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரவணன் தனது தந்தையிடம், அடிக்கடி மது அருந்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெயபாண்டியன் வீட்டில், தென்னை மரத்துக்கு வைக்கக்கூடிய குருணை மருந்தை குடித்து விட்டார். இதை அறிந்த உறவினர்கள் அவரை காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story