ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு


ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
x
தினத்தந்தி 4 Sept 2021 7:58 PM IST (Updated: 4 Sept 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ஐகோர்ட்டு நீதிபதிகள் இளந்திரையன், கோவிந்தராஜ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். 

இந்த ஆய்வின்போது, கோர்ட்டு மற்றும் மக்கள் நீதிமன்றம் மூலம் ஏற்கனவே தீர்வு காணப்பட்ட 14 வழக்குகளில் தொடர்பு உடையவர்களுக்கு ரூ.44.53 லட்சத்தை வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினர். 
பின்னர் அங்குள்ள வக்கீல்கள் சங்க அலுவலகத்துக்கு சென்ற ஐகோர்ட்டு நீதிபதிகளை வக்கீல்கள் வரவேற்றனர். அங்கு அவர்கள் மூத்த வக்கீல்களுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி தங்கமாரியப்பன், கூடுதல் நீதிபதிகள் ஹேமா, பிலிப்நிக்கோலஸ் அலெக்ஸ், தலைமை குற்றவியல் நீதிபதி செல்வகுமார், மூத்த வக்கீல்கள் திலக், சொக்கலிங்கம், ஜவகர், அந்தோணி, பாலகிருஷ்ணன், பால்ஆசீர், ரவீந்திரன் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

Next Story