திருப்பூரில் ஒரே நாளில் 40 இடங்களில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


திருப்பூரில் ஒரே நாளில் 40 இடங்களில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 4 Sep 2021 3:28 PM GMT (Updated: 4 Sep 2021 3:28 PM GMT)

திருப்பூரில் ஒரே நாளில் 40 இடங்களில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருப்பூர், 
திருப்பூரில் ஒரே நாளில் 40 இடங்களில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 
வடமாநில தொழிலாளர்கள்
திருப்பூர் மாநகர் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பனியன் நிறுவன தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் இருந்து வருவதால், தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தடுப்பூசிகள் பெறப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. தடுப்பூசி பல்வேறு பகுதிகளில் சுழற்சி முறையில் செலுத்தப்பட்டு வருகிறது. 
தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பகுதிகளில் கூடுதலாக தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோல் வடமாநில தொழிலாளர்கள் உள்பட பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு தடுப்பூசி கிடைக்க சிறப்பு முகாம்கள் மாநகரில் உள்ள 4 மண்டலங்களிலும் மண்டலத்திற்கு ஒரு பகுதி என அங்கேரிபாளையம் கொங்குவேளாளர் மேல்நிலைப்பள்ளி, பி.பி.மகால், காயத்ரி மகால், ராமசாமி முத்தம்மாள் கல்யாண மண்டபம் ஆகிய 4 இடங்களில் நேற்று நடந்தது. 
20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி 
இதில் ராமசாமி முத்தம்மாள் மண்டபத்தில் நடந்த முகாமில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி சென்றனர். இந்த முகாமை மாநகராட்சி உதவி ஆணையர் கண்ணன் மற்றும் டாக்டர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் கண்காணித்தனர். இதுபோல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடந்தது. 
அதன்படி பல்லடம் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த முகாமில் கல்லூரி மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாணவிகளும் உற்சாகமாக தடுப்பூசி செலுத்தினர். நேற்று மாநகரில் 40 இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

Next Story