திருப்பூர் மாநகரில் கடந்த 3 மாதங்களில் ரூ.25¾ லட்சம் களவு சொத்துகள் மீட்கப்பட்டு, அவற்றை உரியவர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா ஒப்படைத்தார்.


திருப்பூர் மாநகரில் கடந்த 3 மாதங்களில் ரூ.25¾ லட்சம் களவு சொத்துகள் மீட்கப்பட்டு, அவற்றை உரியவர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா ஒப்படைத்தார்.
x
தினத்தந்தி 4 Sept 2021 9:08 PM IST (Updated: 4 Sept 2021 9:08 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் கடந்த 3 மாதங்களில் ரூ.25லட்சம் களவு சொத்துகள் மீட்கப்பட்டு, அவற்றை உரியவர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா ஒப்படைத்தார்.

திருப்பூர்,:
திருப்பூர் மாநகரில் கடந்த 3 மாதங்களில் ரூ.25¾ லட்சம் களவு சொத்துகள் மீட்கப்பட்டு, அவற்றை உரியவர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா ஒப்படைத்தார்.
போலீஸ் தனிப்படை
திருப்பூர் மாநகர பகுதியில் தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. பல்வேறு வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் திருப்பூர் வந்து தங்கி பணியாற்றி வருகிறார்கள். இதனால் குற்றங்கள் அதிக அளவு நடக்க வாய்ப்புள்ளது. குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி, மத்தியம், நல்லூர், வீரபாண்டி ஆகிய 8 போலீஸ் நிலைய பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் கடந்த மாதம் 31-ந் தேதி வரை 3 மாதங்களில் கண்டறிந்து களவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை தகுந்தவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒப்படைப்பு 
போலீஸ் கமிஷனர் வனிதா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். துணை கமிஷனர்கள் ரவி (குற்றம், போக்குவரத்து), அரவிந்த் (சட்டம், ஒழுங்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மொத்தம் 19 இருசக்கர வாகனங்கள், 1 நான்கு சக்கர வாகனம், 3¼ பவுன் நகை, ஒரு டி.வி., ஸ்டவ், ஹோம் தியேட்டர், ரூ.7 லட்சத்து 38 ஆயிரம், 86 செல்போன்கள் என மொத்தம் ரூ.25 லட்சத்து 88 ஆயிரத்து 200 மதிப்புள்ள களவு சொத்துக்கள் மீட்கப்பட்டது. இதில் தொடர்புடைய 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சொத்துக்களை உரியவர்களிடம் போலீஸ் கமிஷனர் வனிதா ஒப்படைத்தார். பொருட்களைபெற்றவர்கள் போலீசாருக்கு நன்றியை தெரிவித்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
இருசக்கர வாகனம் திருட்டு போனால்
வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா நிருபர்களிடம் கூறும்போது, ‘கஞ்சா, புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்கள் செல்போன்களை வழிப்பறி செய்வது, திருடுவது போன்ற சம்பவங்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக மது குடிக்க பணம் இல்லாமல் செல்போன்களை திருடி விற்கிறார்கள். இருசக்கர வாகனங்களை நடைபயிற்சிக்கு செல்வது போல், வக்கீலுக்கு படித்தவர் திருடி சென்றுள்ளார். அந்த நபரிடம் இருந்து 4 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம். செல்போன், இருசக்கர வாகனம் திருட்டு போனால் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் புகார் ஏற்பு ரசீது அல்லது வழக்குபதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திருட்டு சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு கைரேகை நிபுணர்கள் சென்று தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை பிடிக்க அதிகம் உதவி புரிந்துள்ளனர். துணை கமிஷனர் ரவி, சிறிய திருட்டு சம்பவம் நடந்த இடங்களையும் நேரடியாக பார்வையிட்டு விசாரணை மேற்கொள்வதன் காரணமாக குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வசதியாக அமைந்துள்ளது. சரியான குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளதால் செல்போன் திருட்டு, இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் குறைய தொடங்கி இருக்கிறது. இ-பீட், கண்காணிப்பு கேமராக்கள் அதிகம் பொருத்தப்பட்டுள்ளதன் காரணமாக குற்றத்தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Next Story