அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Sep 2021 3:46 PM GMT (Updated: 2021-09-04T21:16:39+05:30)

கியாஸ் விலை உயர்வை கண்டித்து கீழ்வேளூரில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிக்கல்:
கியாஸ் விலை உயர்வை கண்டித்து  கீழ்வேளூரில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை அருகே கீழ்வேளூரில், கீழ்வேளூர்- கச்சனம் சாலை சந்திப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லதா முன்னிலை வகித்தார். 
இதில் ஒன்றிய செயலாளர் சுபாதேவி, ஒன்றிய பொருளாளர் அகிலா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலையரசி, வைதேகி, லதா பாமா உள்பட மாதர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story