காங்கேயம், முத்தூர் பகுதியில் 960 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
காங்கேயம், முத்தூர் பகுதியில் 960 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
காஙகேயம்,
காங்கேயம், முத்தூர் பகுதியில் 960 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வுகளும், தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கேயம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று சாவடிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசி 100 பேருக்கும், பாப்பினி-பச்சாபாளையம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் கோவிஷீல்டு தடுப்பூசி 100 பேருக்கும், காங்கேயம் நகரம், பழையகோட்டை சாலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கோவிஷீல்டு தடுப்பூசி 200 பேருக்கும், கோவேக்சின் தடுப்பூசி 100 பேருக்கும் என மொத்தம் 500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
முத்தூர்
முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முத்தூர் வாரச்சந்தை, அரசு மருத்துவமனை வளாகம் ஆகிய 2 இடங்களில் நேற்று காலை நடைபெற்றது. முகாமில் முத்தூர் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு வாரச்சந்தை வியாபாரிகள், பாலூட்டும் தாய்மார்கள், பொதுமக்கள் என மொத்தம் 155 பேருக்கு முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டனர்.
நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நத்தக்காடையூர் அரசு ஆரம்பப்பள்ளி, மருத்துவமனை வளாகம் ஆகிய 2 இடங்களில் நடைபெற்றது. முகாமில் நத்தக்காடையூர் சுகாதாரத்துறை மருத்துவ, செவிலியர் குழுவினர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பொதுமக்கள் என மொத்தம் 305 பேருக்கு முதல் தவணையாக கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி இலவசமாக போட்டனர். இதன்படி முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் ஒரே நாளில் 460 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Related Tags :
Next Story