திருப்பூர் மாநகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


திருப்பூர் மாநகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
x
தினத்தந்தி 4 Sept 2021 9:24 PM IST (Updated: 4 Sept 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் இன்று 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
34 மையங்களில் தடுப்பூசி
திருப்பூர் மாநகரில் 34 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி, டி.எஸ்.கே.ஆரம்ப சுகாதார நிலையம், செல்லம்மாள் காலனி மாநகராட்சி ஆரம்ப பள்ளி, 15 வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அண்ணா நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம், வெங்கமேடு மாநகராட்சி தொடக்கப் பள்ளி, மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம், டி.என்.கே.வித்யாலயா நர்சரி பிரைமரி பள்ளி, நெருப்பெரிச்சல் ஆரம்ப சுகாதார நிலையம், அண்ணா நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, குருவாயூரப்பன் நகர் ஆரம்ப சுகாதார நிலையம், தொட்டிய மண்ணரை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, எல்.ஆர்.ஜி.ஆர். ஆரம்பசுகாதார நிலையம், என்.ஆர்.கே.புரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இதுபோல் மண்ணரை ஆரம்ப சுகாதார நிலையம், காசிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையம், விஜயாபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், நல்லூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.ஆர்.எம்.எச்.தொடக்கப் சுகாதார நிலையம், முத்துப்புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், ராயபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம், வீரபாண்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சுண்டமேடு ஆரம்ப சுகாதார நிலையம், குப்பாண்டம்பாளையம் மாநகராட்சி பள்ளி, கே.வி.ஆர்.நகர் ஆரம்ப சுகாதார நிலையம், கருவம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெரியாண்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், இடுவம்பாளையம் மாநகராட்சி பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் தலா 500 பேர் வீதம் மொத்தம் 17 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு தடுப்பூசி
தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் 1-வது மண்டலத்தில் அங்கேரிப்பாளையம் கொங்கு வேளாளர் மேல்நிலைப்பள்ளியிலும், 2-வது மண்டலத்தில் பி.பி.மகாலிலும், 3-வது மண்டலத்தில் காயத்திரி மகாலிலும், 4-வது மண்டலத்தில் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்திலும் தலா 2 ஆயிரம் பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Next Story