கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கலெக்டர் தகவல்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா குறுகிய கால(1 முதல் 6 மாதம்) திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது..மாணவர்களின் தகுதிக்கேற்ப தங்களுக்கு தேவைப்படும் தொழில் நுட்ப பயிற்சியை மேற்கொள்ள தாட்கோவின் www.training.tahdco.com என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவேற்றம் செய்திட வேண்டும். பின்னர் தாங்கள் விரும்பும் பயிற்சிகளுக்கு இத்திட்டத்தின் வாயிலாக கட்டணமில்லா பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து படிகள் வழங்கப்படும். மேலும் பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு எஸ்.சி.வி.டி. மற்றும் எஸ்.எஸ்.சி. சான்றிதழ்கள் வழங்கப்படும். பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளுக்கு வழிவகை செய்யப்படும்.
திறன் மேம்பாட்டு பயிற்சியை முடித்து சான்று பெற்ற பயிற்சியாளர்கள் விழுப்புரம் மாவட்ட தாட்கோ மேலாளரிடம் பயின்ற பயிற்சிகள் தொடர்பாக தொழில் தொடங்கிட http://application.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்து தொழில் முனைவோர் திட்டம் (இ.டி.பி.) மற்றும் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு (எஸ்.இ.பி.ஒய்) திட்டத்தின்கீழ் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கிடவும் ஆவண செய்யப்படும். இந்த அறிய வாய்ப்பை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story