அரசு ஆஸ்பத்திரி சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு லாரி புகுந்தது


அரசு ஆஸ்பத்திரி சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு லாரி புகுந்தது
x
தினத்தந்தி 4 Sep 2021 4:41 PM GMT (Updated: 2021-09-04T22:11:26+05:30)

அரசு ஆஸ்பத்திரி சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு லாரி புகுந்தது

கருமத்தம்பட்டி

கோவையில் இருந்து பஞ்சுலோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பல்ல டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை மாரிமுத்து என்ப வர் ஓட்டி வந்தார். 

சூலூர் அரசு ஆஸ்பத்திரி அருகே லாரி சென்ற போது முன்னால் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென்று தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். 

உடனே அவர் மீது மோதாமல் இருக்க மாரிமுத்து லாரியை நிறுத்த முயன்றார். 

ஆனால் கட்டுப்பாட் டை இழந்த லாரி நிற்காமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதன்பிறகும் நிற்காமல் மோட்டார் சைக்கிளை சுமார் 100 அடி தூரத்திற்கு இழுத்து சென்ற லாரி வேன் மீது மோதியது. 

இதையடுத்து லாரியும், வேனும் சூலூர் அரசு ஆஸ்பத்திரியின் சுற்றுப்புறச் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தன. 

இதில் சுற்றுப்புறச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி, வேன் ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மாணவன் ஆகியோர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். 

இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரி சுற்றுச்சுவரை உடைத்துக் கொண்டு லாரி புகுந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story