அரசு பள்ளி ஆசிரியருக்கு கொரோனா
கலசபாக்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியருக்கு கொரோனோ தொற்று உறுதியானது. இதையடுத்து வகுப்பறையை பூட்டி சீல் வைத்து 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
கலசபாக்கம்
கலசபாக்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியருக்கு கொரோனோ தொற்று உறுதியானது. இதையடுத்து வகுப்பறையை பூட்டி சீல் வைத்து 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
ஆசிரியருக்கு ெகாரோனா
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம், கடலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 29-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை அறிந்த மருத்துவ குழுவினர் உடனடியாக அந்த பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியரை தனிமைப்படுத்தி அவரை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு பரிசோதனை
இதனையடுத்து கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவ குழுவினர் பள்ளியில் அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் அவர் பாடம் நடத்திய வகுப்பறையில் படித்த மாணவ-மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது ஆசிரியர் பயன்படுத்திய வகுப்பறைகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து யாரும் பயன்படுத்தாதவாறு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story