பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி திடீர் சாவு


பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி திடீர் சாவு
x
தினத்தந்தி 4 Sept 2021 10:31 PM IST (Updated: 4 Sept 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி திடீரென உயிரிழந்தார்.

கமுதி, 
பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி திடீரென உயிரிழந்தார்.
தொழிலாளி
 கமுதி அபிராமம் போலீஸ் சரகம் அச்சங்குளத்தைச் சேர்ந்த கந்தன் மகன் பாண்டி (வயது45). இவர் தனது மனைவி ராதிகாவுடன் சேம்பர் செங்கல் சூளை ஒன்றில் வேலை செய்து வந்தார். கமுதி கோட்டை மேட்டில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு சென்றுவிட்டு அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டனர். அங்கு பரோட்டா கோழிக்கறி சாப்பிட்ட பாண்டி வீட்டிற்கு வந்தவுடன் மயங்கி விழுந்தாராம். 
உடனே அவருக்கு அபிராமம் தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தபின் பாண்டியை கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோத்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித் தனர். 
விசாரணை
இதுகுறித்த புகாரின்பேரில் அபிராமம் போலீஸ் இன்ஸ் பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, அருள்தாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story