சிறு வணிகர்களுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்


சிறு வணிகர்களுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Sep 2021 5:07 PM GMT (Updated: 2021-09-04T22:37:28+05:30)

வாணியம்பாடியில் சிறு வணிகர்களுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடி

தமிழக அரசுக்கும், மின்வாரியத்திற்கு தமிழ்நாடு மின் இணைப்பு ஒப்பந்ததாரர்கள் சங்கம் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் சிறு வணிகர்கள் புதிய மின் இணைப்பு பெறுவதில் எந்தவித நிபந்தனையும் இன்றி மின்வாரியம் மின் இணைப்பு வழங்கி வந்தது. தற்போது திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் கடந்த சிலநாட்களாக, சிறு வணிகர்கள் புதிய மின் இணைப்பு பெறுவதற்கு மின்வாரியம் பல நிபந்தனைகள் விதித்துள்ளது, 

இதனால் சிறு வணிகர்கள் புதிய மின் இணைப்பு பெற முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, இந்த அறிவிப்பை தமிழக அரசு மின் வாரியம் திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சிறு வணிகர்கள் வணிகம் செய்ய புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வாணியம்பாடி- பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு துணை மின் நிலையம் எதிரில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் ஒப்பந்ததாரர்கள் சங்க திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகி பாக்கியராஜ், வி.வேலு உள்ளிட்ட நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

Next Story