நல்லாசிரியர் விருதுக்கு 8 பேர் தேர்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது
இந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அதன் விவரம் வருமாறு:-
அ.அருண்குமார் -கேத்தாண்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நா.ஜனார்த்தனன் -அரசு மேல்நிலைப்பள்ளி கசிநாயக்கன்பட்டி, ஆர்.செலினா -அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை, கா.பிரதீப் -அரசு மேல்நிலைப்பள்ளி பூங்குளம், ஜி.கஜலட்சுமி- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேல்பட்டு,
ஆ.அருண்குமார் -ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சிந்தகமாணிபெண்டா, ச.செண்பகவல்லி -ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சின்ன வெங்காய பள்ளி, சி.சரவணன்- நகராட்சி நடுநிலைப்பள்ளி பெத்தலகேம் ஆம்பூர்.
நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story