மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
ஜோலார்பேட்டை அருகே மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
ஜோலார்பேட்டை பகுதியில் திருப்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கீழ்அச்சமங்கலம் பகுதியில் சுந்தரமூர்த்தி மனைவி நந்தியம்மாள் (வயது 47) என்பவர் தனது பெட்டிக்கடையில் விற்றுக்கொண்டிருந்த 10 மதுபாட்டில்களை செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தியம்மாளை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் ஜோலார்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அரசு மற்றும் போலீசார் அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் வட்டம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த ஊரை சேர்ந்த சண்முகசுந்தரம் (37) என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார்். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story