வார விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


வார விடுமுறை காரணமாக  கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Sep 2021 5:54 PM GMT (Updated: 2021-09-04T23:24:16+05:30)

வார விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

கொடைக்கானல்:
கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிப்பையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனிடையே வார விடுமுறை காரணமாக நேற்று காலை முதலே பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானல் நகருக்கு வருகை தந்தனர். இதன் காரணமாக சுற்றுலா இடங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. அத்துடன் நட்சத்திர ஏரியில் ஏராளமானோர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். 
இதனிடையே சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக நேற்று பகல் 2 மணி முதல் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக மிதமான மழை நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story