நர்சிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு


நர்சிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 4 Sept 2021 11:24 PM IST (Updated: 4 Sept 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே நர்சிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

ஆம்பூர்

ஆம்பூர் அருகே நர்சிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

ஆம்பூரை அடுத்த வலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தீபா (வயது 38). இவர் நரியம்பட்டு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். 

அவர் இன்று பெரியவெங்கடசமுத்திரம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் அருகில் வந்து தீபா அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். 

அதிர்ச்சி அடைந்த தீபா திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிட்டு அலறினார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்று விட்டனர். 

இதுகுறித்து தீபா, உமராபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



Next Story