பொன்னை அணைக்கட்டில் இருந்து 3,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பொன்னை அணைக்கட்டு நிரம்பி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பொன்னை அணைக்கட்டு நிரம்பி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பொன்னை அணைக்கட்டு
வாலாஜா தாலுகா பொன்னை கிராமம் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே பொன்னை அணைக்கட்டு உள்ளது. ஆந்திர மாநிலத்தில் மழை பெய்யும்போதும் அங்குள்ள கலவகுண்டா அணை திறக்கப்படும்போதும் பொன்னை அணைக்கு தண்ணீர் வரும்.
தற்போது ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழையால் கலவகுண்டா அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக பொன்னை அணைக்கட்டு நிரம்பி பொன்னை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் பாலாற்றில் கலக்கிறது.
தற்போது சுமார் 3 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கலெக்டர் உத்தரவு
அதன் காரணமாக பாலாற்றின் கரையோரம் உள்ள மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், கொண்டகுப்பம், சீக்கராஜபுரம், நரசிங்கபுரம்,லாலாப்பேட்டை, தெங்கால், ராணிப்பேட்டை காரை பகுதி, திருமலைச்சேரி, பூண்டி, குடிமல்லூர், சாத்தம்பாக்கம், விஷாரம், ஆற்காடு, சக்கரமல்லூர், புதுப்பாடி ஆகிய கிராம மக்கள், தாழ்வான பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், யாரும் ஆற்றைக் கடக்க வேண்டாம் எனவும், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story