சிவகாசி நகராட்சி பள்ளி ஆசிரியைக்கு கொரோனா


சிவகாசி நகராட்சி பள்ளி ஆசிரியைக்கு கொரோனா
x
தினத்தந்தி 5 Sept 2021 12:38 AM IST (Updated: 5 Sept 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே அவருடன் பணியாற்றிவரும் சக ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சிவகாசி,

சிவகாசி நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே அவருடன் பணியாற்றிவரும் சக ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஆசிரியைக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அம்மன் கோவில்பட்டியில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி கடந்த 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றன. இதில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியை ஒருவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு நேற்று வெளியான போது அந்த ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த ஆசிரியைக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரிசோதனை

கொரோனா பாதிப்பு அடைந்த ஆசிரியை கடந்த 1-ந்தேதி பள்ளி திறக்கப்பட்ட போது பணிக்கு வந்திருந்தார். அதனால் அவருடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், அவர் பாடம் நடத்திய வகுப்பில் இருந்த மாணவ-மாணவிகளுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு இன்று அல்லது நாளை தெரியவரும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பள்ளிக்கூடம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Next Story