கரூரில் நல்லாசிரியர் விருதுக்கு 10 பேர் தேர்வு
கரூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 10 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) விருது வழங்கப்படுகிறது.
கரூர்,
நல்லாசிரியர் விருது
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இதில் கரூர் மாவட்டத்தில் 10 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
1. வெ.ப.செல்வராஜ், உடற்கல்வி ஆசிரியர், டாக்டர். எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம். 2. இரா.ராஜசேகரன், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம். 3. பெ.தனபால், முதுகலை ஆசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, பஞ்சப்பட்டி. 4. ப.சக்திவேல், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, மணவாடி.
வாழ்த்து
5. த.கண்மணி, தலைமை ஆசிரியை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆண்டாங்கோவில் புதூர், தாந்தோணி. 6. ஆ.உமா, இடைநிலை ஆசிரியை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மணவாடி, தாந்தோணி. 7. பெ.ராஜேந்திரன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, க.பரமத்தி. 8. இரா.ஜெயகுமார், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பஞ்சப்பட்டி, கிருஷ்ணராயபுரம். 9. த.பிரகாசம், முதல்வர், வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வாங்கல். 10. கோ.பெரியசாமி, விரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், மாயனூர்.
கரூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ள ஆசிரியர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாளை வழங்கப்படுகிறது
தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சென்னையில் விருது வழங்கப்படவில்லை.
அதற்கு பதிலாக நாளை (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 9 மணியளவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story