குண்டூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை


குண்டூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 4 Sep 2021 7:39 PM GMT (Updated: 4 Sep 2021 7:39 PM GMT)

குண்டூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

திருவெறும்பூர்,செப்.5-
திருச்சி மாநகராட்சி விரிவுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி, கீழக்குறிச்சி, பனையக்குறிச்சி ஆகிய 4 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.  இதற்கு குண்டூர் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஊராட்சியில் விவசாய தொழிலாளர்களே அதிக அளவில் உள்ளனர் என்றும், ஆடு, மாடுகள் மேய்த்தும், 100 நாள் வேலை திட்டத்தை நம்பியே உள்ளோம். மாநகராட்சியுடன் இணைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் ஆகவே குண்டூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி  நேற்று அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனுகொடுத்துவிட்டு  கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story