கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாலாபேட்டை,
லாலாபேட்டை பஸ் நிறுத்தம் அருகே 2 வாலிபர்கள் நின்று கொண்டு அப்பகுதியில் செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து லாலாபேட்டை போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த நரேந்திரன் (வயது 26), திருச்சி வரதராஜ புரத்தை சேர்ந்த கோபி (24) என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.500 மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் லாலாபேட்டையை அடுத்த கீழ சிந்தலவாடி பிரிவு சாலையில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த செல்வகுமார் (21), பாலகிருஷ்ணன் (47) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story