ஆயுதப்படை போலீசாருக்கு அமுக்கரா சூரணம்


ஆயுதப்படை போலீசாருக்கு அமுக்கரா சூரணம்
x
தினத்தந்தி 5 Sept 2021 1:22 AM IST (Updated: 5 Sept 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் ஆயுதப்படை போலீசாருக்கு அமுக்கரா சூரணம் மருந்து வழங்கப்பட்டது.

நெல்லை:
நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர்களுக்கு கபசுர குடிநீரும், கர்ப்பிணி பெண் போலீசாருக்கு அமுக்கரா சூரணம் சித்த மருந்தும் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் திருத்தணி, டாக்டர் சுபாஸ்சந்திரன், மத்திய அலுவலகத்தின் ஆராய்ச்சி அலுவலர் சிவரஞ்சனி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
நெல்லை மாநகர சட்டம்- ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு சித்த மருத்துவத்தின் பலன்களையும், கொரோனா வைரஸ் மூன்றாவது அலை உருவானால், அதில் இருந்து எப்படி பாதுகாத்துகொள்வது என்பது பற்றியும் போலீஸ்காரர்களுக்கு ஆலோசனை வழங்கி கபசுர குடிநீர், மருந்து பொருட்களை வழங்கினார். உதவி போலீஸ் கமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story