எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய மேலும் ஒருவர் கைது
நெல்லையில் எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை பரணி நகரில் முகேஷ்குமார் என்பவரது எலக்ட்ரிக்கல் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.7½ லட்சம் திருடு போனது. இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே கடையில் ஊழியராக பணியாற்றிய பர்வேஷ்குமார் ரூ.7½ லட்சத்தை திருடியதும், பின்னர் அந்த பணத்தை தனது நண்பரிடம் கொடுத்து சென்னைக்கு அனுப்பியதும் தெரிய வந்தது.
இதையடுத்து பர்வேஷ்குமாரை கைது செய்த போலீசார், தலைமறைவான அவரது நண்பரான செங்கல்பட்டில் செல்போன் கடை நடத்தி வந்த ஹாசுராமை (21) வலைவீசி தேடினர். இந்த நிலையில் ஹாசுராமை போலீசார் கைது செய்து நெல்லை அழைத்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக தலைமறைவான முக்கிய குற்றவாளியான சென்னையைச் சேர்ந்த லலித்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story