வரதட்சணை கேட்டு பெண்ணை மிரட்டியதாக 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.


வரதட்சணை கேட்டு பெண்ணை மிரட்டியதாக 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
x
தினத்தந்தி 5 Sept 2021 1:31 AM IST (Updated: 5 Sept 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே வரதட்சணை கேட்டு மிரட்டியதாக 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் கம்மாப்பட்டி பகுதியை சேர்ந்த முத்து என்பவர் மகள் பிரியா (வயது 30). இவருக்கும் நெய்வேலியை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் பிரவீன் (34) என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 29 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் சீதனமாக வழங்கி உள்ளனர். நெய்வேலியில் கூட்டுக்குடும்பமாக வசித்த போது கணவரது குடும்பத்தினர் 29 பவுன் நகையை வாங்கியதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி தன்னை கணவர் குடும்பத்தினர் மிரட்டுவதாக பிரியா ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் விசாரணை நடத்தி கணவர் பிரவீன், மாமனார் கணேஷ், பிரவீன் சகோதரி ராணி, உறவினர்கள் ஜெயராமன், பருவதம், பிரகாஷ், வைசாலி ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story