தூங்கி கொண்டிருந்த தொழிலாளி அடித்துக்கொலை
திருச்சியில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளியை திருட்டு ஆசாமிகள் தாக்கிய வீடியோ வைரலானது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
திருச்சி, செப்.5-
திருச்சியில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளியை திருட்டு ஆசாமிகள் தாக்கிய வீடியோ வைரலானது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
கூலித்தொழிலாளி
திருச்சி திருவானைக்காவல் நடுக்கொண்டையன் பேட்டை மல்லிகைபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 67). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தனது வீட்டு வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.அதிகாலை 2.30 மணி அளவில் மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் அவர்களில் ஒருவன் இறங்கி வந்து, வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த மனோகரன் சட்டைப் பைக்குள் கையை விட்டு பணத்தை திருடினான்.
தாக்கி விட்டு தப்பினர்
அப்போது மனோகரன் திடுக்கிட்டு எழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திருடன், அவரை கைகளால் சரமாரியாக தாக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி கூட்டாளியுடன் தப்பி சென்றான்.
திருடன் தாக்கியதில் நிலைதடுமாறிய மனோகரன் வீட்டின் முன்பக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விழுந்தார். பின்னர் எழுந்த அவர் சாலையில் விழுந்தார்.
ஆஸ்பத்திரியில் சாவு
இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மனோகரன் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். வழிப்பறி திருடர்களால் தாக்கப்பட்ட தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைரலான வீடியோ
வீட்டு முன்பு படுத்திருந்த தொழிலாளியிடம் பணத்தை பறித்து தாக்கிய காட்சி, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அது தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், `திருடர்கள் கைகளால் மட்டுமே தாக்கியுள்ளனர். அதன்பின்னர் அவர் நடந்து செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் மோதிக் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்படும். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த திருடர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்' என்றனர்.

Related Tags :
Next Story