சனி பிரதோஷ வழிபாடு


சனி பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 5 Sept 2021 1:38 AM IST (Updated: 5 Sept 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவன்கோவில்களில் நேற்று சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவன்கோவில்களில் நேற்று சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வெம்பகோட்டை மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோவில், விருதுநகர் சொக்கநாதசுவாமி கோவில், சத்திரம் காசி விஸ்வநாதசுவாமி கோவில், பழைய ஏழாயிரம் பண்ணை ஈஸ்வரன் கோவில், அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் நேற்று சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.

Next Story