உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
நெல்லையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
நெல்லை:
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி கடந்த வாரம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கான பயிற்சி முகாம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி கலந்துகொண்டு, உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை எப்படி வாங்க வேண்டும், பரிசீலனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.
முகாமில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என 297 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராம்லால், தேர்தல் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன், தேர்தல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திராவிடமணி ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story