9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை


9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 5 Sept 2021 1:46 AM IST (Updated: 5 Sept 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவள் தனது சித்தியின் பராமரிப்பில் இருந்து வரும் நிலையில் அந்த சிறுமியின் உறவினரான 9-ம் வகுப்போடு படிப்பை விட்டுவிட்டு ஊர் சுற்றித் திரியும் சிறுவன், அந்த மாணவியை காதலிப்பதாக கூறி உள்ளான்.
 இதற்கு அந்த மாணவி உடன்பட மறுக்கவே என்னை காதலிக்காவிட்டால் உன்னையும் கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளான். இதனைத் தொடர்ந்து அந்த மாணவி அவனை காதலிக்க தொடங்கி உள்ளாள். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவியின் சித்தியிடம் வந்து தனக்கு அந்த மாணவியை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளான். இதனையடுத்து இது பற்றி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அந்த சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவனை தேடி வருகின்றனர்.


Next Story